Blog

யானைய்க்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும் - இன்றைய பொருள்

Date : 29th Oct 2016

Posted By : Admin

யானைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கும் ஒரு காலம் வரும் “ இன்றைய பொருள் : யானை போன்ற பலம் பொருந்தியவர்கள் ஒரு சில காலக் கட்டங்களில் வெற்றி பெற்றால், பூனையை போன்ற பலம் குறைந்தவர்களும் தகுந்த நேரம் வரும் போது வெற்றி பெறுவார்கள். அதாவது, வலியோர்களுக்கு ஒரு காலம் வந்தால், எளியோர்களுக்கும் ஒரு காலம் வரும் என்பதே கருத்து. ஆனால், இது உண்மையான பொருள் இல்லை. இந்தப் பழமொழி உருமாறி இருக்கிறது. உண்மையான பொருள் : ‘ஆநெய்க்கு ஒரு காலம் வந்தால் பூநெய்க்கு ஒரு காலம் வரும்’ என்பதே உண்மையான பழமொழி. ‘ஆ’ என்றால் ஆவினம். ஆவினம் என்றால் பசுக்கூட்டம் என்று பொருள். பசுவின் பாலில் இருந்து கிடைக்கக்கூடிய நெய்யை இளமைக் காலத்தில் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பொலிவு ஏற்படும். ‘பூ’ நெய் என்றால் பூவினால் கிடைக்கும் தேன். இந்தத் தேனை முதுமைக் காலத்தில் உட்கொண்டால் உடலுக்கு எந்தவிதமான தீங்குகளும் ஏற்படாது. இந்த கருத்தை உணர்த்தவே ' ஆநெய்க்கு ஒரு காலம் வந்தால் பூநெய்க்கு ஒரு காலம் வரும்' என்று கூறியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள். ஆக, இப்பழமொழியில் யானைக்கும், பூனைக்கும் சம்பந்தமில்லை என்பதையும் உணர்க.