Blog

கார்த்திகை தீபம் ஏற்றும் தாத்பர்யம்

Date : 2nd Dec 2017

Posted By : Admin

கார்த்திகை  தீபம்  ஏற்றும் தாத்பர்யம் 

Courtesy:  Facebook 

கார்த்திகை தீபத்துக்கு பதில் மெழுகு விளக்குகளை ஏற்றுவதை ரொம்பப் பெருமையாக நினைத்து ஏற்றும் கூட்டம் ஓன்று உள்ளது.

கார்த்திகை தீபத்தின் அடிப்படை என்ன என புரியாததுதான் இதற்க்கு காரணம்.

கார்த்திகை மாதம் பூச்சிகள் அதிகம் வரும் மாதம். மேலும் நோய்கள் பரவும் காலமும் கூட. அப்படி வரும் பூச்சிகளை வீட்டுக்குள் நுழையாமல் தடுக்கவே அந்த மாதம் முழுவதும் வாசலில் விளக்கு வைக்கச் சொன்னார்கள்.

வரும் பூச்சிகள் அவ்விளக்கின் ஒளியில் ஈர்க்கப்பட்டு அதில் மடிந்து விடும். இதை சும்மா சொன்னா மக்கள் கேட்க மாட்டாங்கன்னுதான் கடவுளோடு தொடர்பு படுத்தி சொல்லி கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தோடு இணைந்து வரும் பவுர்ணமி தினத்தை கார்த்திகைத் திருநாளாக கொண்டாடச் சொன்னார்கள்.

உடனேயே கேட்பாங்க பூச்சிக்கு அகல் விளக்குன்னு தெரியுமா மெழுகு விளக்குன்னு தெரியுமான்னு. அதுக்கும் பெரியவர்கள் ஒரு காரணத்தை வைத்திருக்கிறார்கள்..அகல் விளக்கில் தவிடு கொண்டு கட்டிய கிளியை இட்டு விளக்கெண்ணெய் கொண்டு வாசலில் விளக்கேற்ற வேண்டும்.

விளக்கெண்ணெயில் இருந்து வரும் புகை காற்றில் கலந்து நாம் சுவாசிப்பது உடலுக்கு நன்மை விளைவிக்கும். அதே மெழுகு விளக்கிலிருந்து வரும் புகை வியாதியைத்தான் ஏற்படுத்தும். ஈசியா புத்திசாலித்தனமா கொண்டாடறோம்னு காற்றையும் தூய்மைக் கேடாக்கி வியாதியையும் வாங்கி வைத்துக்கொள்கிறோம்..

கோவிலுக்கு தான் நெய் விளக்கு கொண்டு போக சோம்பேறிதனப்பட்டு அங்கு விற்க்கும் பொய் விளக்கை வாங்கி ஏற்றுகிறோம்...சரி வீட்டிலாவது நெய் வேண்டாம் மற்ற எண்ணெய் விளக்குகளில் தீபம் ஏற்றுவதை விடுத்து, இப்படி எதற்க்கும் உதவாத கரியை மட்டும் கக்கும் மெழுகு விளக்குகளை ஏற்றலாமா?

நம் பெரியவர்கள் எதையுமே சும்மா சொல்லிப் போகவில்லை. எல்லாவற்றிற்கும் காரண காரியங்கள் இருக்கிறது. அவற்றை அறியாமல் தெரிந்து கொள்ளக் கூட முயலாமல் இக்காலத்துக்கு ஏற்ற மாதிரி கொண்டாடறோம்னு பண்டிகைகளையே அபத்தமாக்கி விடுகிறோம்...